ஆஸ்பத்திரிகளில் தீ தடுப்பு தணிக்கை : தீயணைப்பு துறைக்கு மாநகராட்சி உத்தரவு


ஆஸ்பத்திரிகளில் தீ தடுப்பு தணிக்கை : தீயணைப்பு துறைக்கு மாநகராட்சி உத்தரவு
x
தினத்தந்தி 23 May 2019 4:07 AM IST (Updated: 23 May 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் தீ தடுப்பு தணிக்கை நடத்த தீயணைப்பு துறைக்கு மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.

மும்பை,

மும்பை அந்தேரியில் உள்ள காம்கார் ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 13 பேர் பலியானார்கள். 175 பேர் காயம் அடைந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் மும்பையில் அதிர்வலையை உண்டாக்கியது.

இந்தநிலையில், மும்பையில் உள்ள அனைத்து மாநகராட்சி ஆஸ்பத்திரிகளிலும் தீ தடுப்பு தணிக்கை நடத்த தீயணைப்பு துறைக்கு மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.

இதன்படி நகரில் உள்ள மாநகராட்சியின் பெரிய ஆஸ்பத்திரிகள், 28 நர்சிங் ஹோம்கள், 208 சுகாதார மையங்களில் தீ தடுப்பு சோதனை நடத்த தீயணைப்பு படை முடிவு செய்து உள்ளது.

இதுபற்றி தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் தீ தடுப்பு தணிக்கை நடத்தி விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த தணிக்கையின் போது தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகைகளும் நடத்தப்படும்’’ என்றார்.

Next Story