தஞ்சையில் வெறிச்சோடிய வாக்கு எண்ணும் மையம் ஏராளமான போலீசார் குவிப்பு


தஞ்சையில் வெறிச்சோடிய வாக்கு எண்ணும் மையம் ஏராளமான போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 24 May 2019 4:15 AM IST (Updated: 24 May 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை நாடாளுமன்ற மற்றும் தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குகள் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் நேற்று எண்ணப்பட்டது. இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்ற பணியாளர்கள், முகவர்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். காலை 8 மணி அளவில் அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் அதிக அளவில் திரண்டனர்.

வெறிச்சோடியது

வாக்கு எண்ணும் பகுதிக்குள் முகவர்கள் தவிர மற்றவர்கள் நுழையாமல் இருக்க ஆங்காங்கே தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 10 மணி அளவில் வேட்பாளர்களின் பிரமுகர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

முன்னணி நிலவரம் தெரிய தொடங்கிய பின் பல அரசியல் கட்சியினர் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடை அறிந்து அங்கிருந்து கலைய தொடங்கினர். காலை 11 மணிக்கு பிறகு வாக்கு எண்ணும் மையம் வெறிச்சோடியது. மாலை வெற்றி அறிவிக்கப்பட்ட பின்னரே வெற்றி பெற்றவர்களுடன் அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வருகை தந்ததை பார்க்க முடிந்தது.

Next Story