பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், 16 சுற்றுகள் முடிவில் அ.தி.மு.க. 12,376 வாக்குகள் முன்னிலை
பரமக்குடி சட்டமன்றதொகுதி இடைத்தேர்தலில் 16 சுற்றுகள் முடிவில் அ.தி.மு.க. 12,376 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.
பரமக்குடி,
பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சதன் பிரபாகர்(அ.தி.மு.க.), சம்பத்குமார் (தி.மு.க.), முத்தையா(அ.ம.மு.க.), சங்கர்(மக்கள் நீதி மய்யம்), ஹேமலதா (நாம் தமிழர்) உள்பட 13 பேர் போட்டியிட்டனர்.
தொகுதியில் மொத்த வாக்குகள்-2,46,727. பதிவான வாக்குகள்- 1,76,089. இந்த சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் எண்ணப்பட்டன.
இதில் அ.தி.மு.க., தி.மு.க. மாறி, மாறி முன்னிலை வகித்தன. 16-வது சுற்று முடிவில் 12,376 வாக்குகள் முன்னிலையில் அ.தி.மு.க. வெற்றி முகத்தில் பயணித்தது. 16-வது சுற்றில் கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
அ.தி.மு.க.-59,840
தி.மு.க.-47,464
அ.ம.மு.க.-6,481
நாம்தமிழர்-4,834
ம.நீ.ம.-4,631
நோட்டா-1,203
Related Tags :
Next Story