தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் தற்கொலை


தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 25 May 2019 4:30 AM IST (Updated: 24 May 2019 8:43 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 55). திருமணம் ஆகாதவர். இவர் திருமண வீடுகளுக்கு ஒப்பந்த முறையில் சமையல் செய்து கொடுத்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டாம். அவர் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தனது தாய் ஜோஸ்பின் மேரியுடன் தகராறு செய்வாராம்.சம்பவத்தன்று ஜெயக்குமார் மது குடிக்க தனது தாயிடம் பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த ஜெயக்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் முத்து. இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவருடைய மகன் சுப்பையா (32). இவர் வெல்டராக பணியாற்றி வந்தார். இவருக்கும், புவனேசுவரி (23) என்பவருக்கும் கடந்த 2-ந்தேதி திருமணம் நடந்தது.இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்பையா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுப்பையாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story