பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்றக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. பின்னர் அதன் அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அதன்மூலம் நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது பழுதடைந்து சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. அந்த நீர்த்தேக்க தொட்டியின் அருகில் ஏராளமான வீடுகள் உள்ளன.
நீர்த்தேக்க தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து கீழே விழலாம் என்ற நிலையில் உள்ளதால் நீர்த்தேக்க தொட்டியின் அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். தற்போது அந்த குடியிருப்பு பகுதிக்கு மற்றொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து பொதுமக்களுக்கு உயிர் சேதம் ஏற்படும் முன்னர் அகற்ற வேண்டும். மேலும் அந்த இடத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்து கின்றனர்.
Related Tags :
Next Story