பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் விரக்தி


பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் விரக்தி
x
தினத்தந்தி 25 May 2019 5:00 AM IST (Updated: 24 May 2019 9:43 PM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டி அருகே செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் விரக்தி அடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூரை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவருடைய மகள் விஜிதா (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்–2 முடித்து விட்டு கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்து இருந்தார். மாணவி வீட்டில் எப்போதும் செல்போனில் விளையாடிக்கொண்டும், தோழிகளுடன் பேசிக்கொண்டும் இருந்துள்ளார்.

இதை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி விஜிதா நேற்று தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த பொதுமக்கள் விரைந்து சென்று மாணவியின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். அப்போது அங்கு திரண்டு இருந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விஜிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்த கிணறு தண்ணீர் இன்றி வறண்டதால் மாணவிக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story