குறிஞ்சிப்பாடி பகுதியில், மதுபாட்டில்கள் விற்ற 5 பேர் கைது
குறிஞ்சிப்பாடி பகுதியில் மதுபாட்டில்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி பகுதியில் சிலர் தங்களது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் நேற்று காலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குறிஞ்சிப்பாடி ராஜீவ்காந்தி நகரில் மதுபாட்டில்கள் விற்றதாக முகமதுஅலி(வயது 55) என்பவரை போலீசார் கைது செய்த னர். அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கு.நெல்லிக்குப்பம் மேற்கு தெருவில் மதுபாட்டில்கள் விற்றதாக ரவி மகன் ராகுல்(21) என்பவரையும் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் ரங்கநாதபுரம் தொழுவன்குப்பத்தில் மதுபாட்டில்கள் விற்றதாக கொழுந்து மகன் சதீஸ்குமார்(25), வடக்குதிட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்த பட்டுசாமி மகன் அருள்தாஸ்(34), தம்பிபேட்டை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சீதாராமன் மகன் சீனுவாசன்(28) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரிடம் இருந்து மொத்தம் 29 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story