மாவட்ட செய்திகள்

தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலைபோலீசார் விசாரணை + "||" + Two suicides, including the worker Police investigation

தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலைபோலீசார் விசாரணை

தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலைபோலீசார் விசாரணை
தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கிறிஸ்துபாளையம். இந்த ஊரை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சரவணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பேரிகை அருகே உள்ள காமப்பள்ளியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (24). இவர் உடல்நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் இறந்தார். இது குறித்து பாகலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனிமொழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.