சேரன்மாதேவி அருகே மினிலாரி-மோட்டார்சைக்கிள் மோதல்; என்ஜினீயர் பலி


சேரன்மாதேவி அருகே மினிலாரி-மோட்டார்சைக்கிள் மோதல்; என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 25 May 2019 4:15 AM IST (Updated: 24 May 2019 11:45 PM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவி அருகே மினிலாரியும், மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

சேரன்மாதேவி, 

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு மூன்று மகன்கள். இதில் 2-வது மகன் பாலன் (வயது 25). என்ஜினீயரான இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை மோட்டார்சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பத்தமடை பஸ்நிலையம் அருகே சென்றபோது எதிரே நெல்லையில் இருந்து சேரன்மாதேவி நோக்கி வந்த மினிலாரி மோதியதில், மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலைப்பகுதி மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை பாலன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story