மராட்டியத்தில் ‘காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பு ஏற்கிறேன்’ அசோக் சவான் பேட்டி


மராட்டியத்தில் ‘காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பு ஏற்கிறேன்’ அசோக் சவான் பேட்டி
x
தினத்தந்தி 25 May 2019 5:15 AM IST (Updated: 25 May 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பு ஏற்பதாக அசோக் சவான் கூறினார்.

மும்பை, 

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இந்த தேர்தலில் பா.ஜனதா கடந்த ஆண்டை போலவே மெகா வெற்றியை பதிவு செய்தது.

காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சியால் ஒரேஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

நாந்தெட் தொகுதியில் களம் கண்ட மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவானும் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் மாநிலத்தில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பு ஏற்பதாக அசோக் சவான் கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மராட்டியத்தில் காங்கிரஸ் தோல்விக்கான காரணம் குறித்து கட்சி தலைமைக்கு தெரிவிப்பேன். தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆளும் கட்சியினரால் மக்கள் சார்ந்த பிரச்சினைகளை பிரசாரத்தில் எடுத்துரைத்தோம். ஆனால் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பது கவலை அளிப்பதாக உள்ளது.

இருப்பினும் கட்சி தொண்டர்கள் சோர்ந்துவிடாமல், இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு முழு பலத்துடன் தயாராக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story