நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் நோட்டாவுக்கு 18,149 ஓட்டுகள் , 5-வது இடத்தை பிடித்தது


நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் நோட்டாவுக்கு 18,149 ஓட்டுகள் , 5-வது இடத்தை பிடித்தது
x
தினத்தந்தி 25 May 2019 3:30 AM IST (Updated: 25 May 2019 5:43 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி நாடாளு மன்ற தொகுதியில் நோட்டா வுக்கு 18,149 ஓட்டுகள் கிடைத்தது. இதன்மூலம் 5-வது இடத்தை பிடித்தது.

ஊட்டி,

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இடையேதான் கடும்போட்டி நிலவியது. ஆனால் அதை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பிடிக்கும் அரசியல் கட்சி எது என்று கடும்போட்டி நிலவியது. அதாவது 3-வது இடத்தை பிடிக்க மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டனர்.

ஆனாலும் அதை கடந்து மேற்கண்ட வேட்பாளர்கள் மீதோ, சுயேச்சை வேட்பாளர்கள் மீதோ நம்பிக்கை இல்லாமல் நோட்டாவிற்கு பெரும்பான்மையான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.

அதன்படி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜேந்திரன் 41,169 ஓட்டுகளும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராமசாமி 40,419 ஓட்டுகளை பெற்று அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர். அதை தொடர்ந்து 5-வதாக நோட்டாவில் 18,149 ஓட்டுகள் பதிவாகி உள்ளன. சட்டமன்ற தொகுதி வாரியாக நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:-

ஊட்டி சட்டமன்ற தொகுதியில் நோட்டாவுக்கு 2,296 ஓட்டுகளும், கூடலூர் சட்டமன்ற தொகுதியில் 1,520 ஓட்டுகளும், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 2,322 ஓட்டுகளும், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 4,375 ஓட்டுகளும், அவினாசி சட்டமன்ற தொகுதியில் 4,220 ஓட்டுகளும், பவானி சட்டமன்ற தொகுதியில் 3,363 ஓட்டுகளும், மேலும் தபால் ஓட்டுகளில் 53 நோட்டா ஓட்டுகளும் பதிவாகி இருந்தன. அதன்படி நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 18,149 ஓட்டுகள் நோட்டாவுக்கு பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக நோட்டாவுக்கு 4,375 ஓட்டுகளும், குறைந்தபட்சமாக கூடலூர் சட்டமன்ற தொகுதியில் நோட்டாவுக்கு 1,520 ஓட்டுகளும் பதிவாகி உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு அடுத்த படியாக நோட்டா 5-வது இடத்தை பிடித்துள்ளது.

Next Story