உத்தனப்பள்ளியில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
உத்தனப்பள்ளியில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் சூளகிரி சாலையில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மனைவி அனிதா (வயது 24). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அதேபோல் சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அனிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உத்தனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story