சித்தன்னவாசலில் வெயிலின் தாக்கத்தால் 2 மாடுகள் சாவு


சித்தன்னவாசலில் வெயிலின் தாக்கத்தால் 2 மாடுகள் சாவு
x
தினத்தந்தி 25 May 2019 10:30 PM GMT (Updated: 25 May 2019 7:17 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் காலை முதல் மாலை வரை கடுமையான அனல் காற்று வீசுகிறது.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் காலை முதல் மாலை வரை கடுமையான அனல் காற்று வீசுகிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்டு, வீட்டுக்குள்ளேயே முடங்கி வருகின்றனர். மேலும் கடை வீதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில், அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசலை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் என்பவர் வீட்டில் 5-க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அதில், 2 மாடுகள் வெயிலை தாங்க முடியாமல் நேற்றுமுன்தினம் சுருண்டு விழுந்து, அடுத்தடுத்து செத்தன. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை மருத்துவர் மாடுகளை சோதனை செய்து பார்த்ததில், வெயிலின் தாக்கம் தாங்காமல் 2 மாடுகளும் இறந்து விட்டதாக தெரிவித்ததாக கூறப்பட்டது. வெயிலின் வெக்கை தாங்காமல் ஒரே வீட்டில் 2 மாடுகள் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

Next Story