ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவுவது போல் நடித்து நகை திருடிய பெண் கைது


ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவுவது போல் நடித்து நகை திருடிய பெண் கைது
x
தினத்தந்தி 26 May 2019 4:00 AM IST (Updated: 26 May 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவுவது போல் நடித்து நகை திருடிய பெண் கைது செய்துள்ளார்.

சென்னை,

காஞ்சீபுரம் மந்தைவெளி தெரு பகுதியை சேர்ந்தவர் வசந்தா(வயது 40). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தாவின் பணம் மற்றும் நகை திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தா, இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நகை மற்றும் பணத்தை திருடியது வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த காமாட்சி(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து திருடிய நகைகளை அடமானம் வைத்த காமாட்சியை போலீசார் கைது செய்து, நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். இவர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவுவது போல் தொடர் திருட்டில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Next Story