சென்னை புரசைவாக்கத்தில் ரூ.50 லட்சம் ‘ஹெராயின்’ போதைப்பொருள் பறிமுதல் ராஜஸ்தானை சேர்ந்தவர் கைது


சென்னை புரசைவாக்கத்தில் ரூ.50 லட்சம் ‘ஹெராயின்’ போதைப்பொருள் பறிமுதல் ராஜஸ்தானை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 26 May 2019 4:15 AM IST (Updated: 26 May 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புரசைவாக்கத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

வட மாநிலத்தில் இருந்து ‘ஹெராயின்’ போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டு சென்னையில் வசதி படைத்த இளைஞர்களுக்கு வினியோகம் செய்யப்படுவதாக போதைப் பொருள் நுண்ணறிவுப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தது.

இந்தநிலையில் புரசைவாக்கம் பகுதியில் ‘ஹெராயின்’ போதைப்பொருள் வினியோகம் செய்ய எடுத்து செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு டி.எஸ்.பி. டி.புருஷோத்தமன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், ராஜகோபாலன், போலீஸ்காரர்கள் மணிமாறன், ராஜராஜன் ஆகியோர் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புரசைவாக்கத்தில் உள்ள பிரபல துணிக்கடை அருகே நேற்று காலை 10 மணியளவில் கையில் பையுடன் நின்றுக்கொண்டிருந்த நபரை தனிப்படை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரை கிலோ ‘ஹெராயின்’ போதைப் பொருள் இருந்தது.

உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் பார்கோடா தாலுகாவை சேர்ந்த ராஜீராம் விஷ்னோய் (வயது 39) என்பது தெரிய வந்தது. விசாரணைக்கு பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடத்தல் ‘ஹெராயின்’ பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story