இந்திய மாணவர் சங்கம் சார்பில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி சைக்கிள் பேரணி
இந்திய மாணவர் சங்கம் சார்பில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி சைக்கிள் பேரணி களியக்காவிளையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டது.
நாகர்கோவில்,
தமிழகத்தில் ‘நீட்‘ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் களியக்காவிளையில் இருந்து திருச்சிக்கு சைக்கிள் பிரசார பேரணி புறப்பட்டது. இதற்கு மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் பதில் சிங் வரவேற்று பேசினார். மத்திய குழு உறுப்பினர் சத்யா விளக்க உரையாற்றினார். கேரள மாநில முன்னாள் கல்வி மந்திரி எம்.ஏ.பேபி கலந்து கொண்டு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து பேசினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த பேரணி களியக்காவிளை சந்திப்பில் தொடங்கி குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை வழியாக மாலை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் வந்தது. அங்கு பேரணியாக வந்த மாணவர்களை முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. நூர்முகமது, சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை தலைவர் அந்தோணி உள்பட பலர் வாழ்த்தி வரவேற்றனர்.

Related Tags :
Next Story