மதகுபட்டி அருகே மஞ்சுவிரட்டில் மாடு முட்டி வீரர் பலி


மதகுபட்டி அருகே மஞ்சுவிரட்டில் மாடு முட்டி வீரர் பலி
x
தினத்தந்தி 26 May 2019 3:45 AM IST (Updated: 26 May 2019 3:43 AM IST)
t-max-icont-min-icon

மதகுபட்டி அருகே நடந்த மஞ்சு விரட்டில் காளை குத்தியதில் மாடு வீரர் பலியானார்.

சிவகங்கை,

கல்லல் அருகே உள்ள மதகுபட்டியை அடுத்த கீழக்கோட்டையில் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முன்னதாக வழிபாடுகள் முடிந்து கீழக்கோட்டையில் உள்ள பொட்டலில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளை மடக்கி பிடித்தனர். சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்து ஓடின. களத்தில் சில காளைகள் நின்று விளையாடின. இந்த உற்சாகமான நேரத்தில் மாடுபிடி வீரர்கள் தங்கள் கவனம் முழுவதையும் காளையின் மீது வைத்து அவற்றை மடக்க முயன்றனர்.

பொட்டலில் நடந்த மஞ்சுவிரட்டின் போது ஒரு காளையை மடக்கி பிடித்த சிவகங்கையை அடுத்த அழகமாநகரி கிராமத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் பாலகுரு (வயது 27) என்பவரை காளை முட்டி தூக்கி எறிந்தது. அதில் பலத்த காயமடைந்த அவரை செம்பனூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே பாலகுரு பரிதாபமாக இறந்து போனார்.

அவரது உடல் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த பாலகுரு வெளிநாட்டில் வேலை செய்து விட்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சமபவம் தொடர்பக மதகுபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story