புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு


புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 27 May 2019 3:45 AM IST (Updated: 26 May 2019 8:19 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

புதுக்கடை,

புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் அரசகுளம் பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது29). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.சம்பவத்தன்று நள்ளிரவு ராஜபாண்டி தனது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சஜினை அழைத்துக் கொண்டு மார்த்தாண்டத்தில் இருந்து தேங்காப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

விபத்து

மோட்டார் சைக்கிளை ராஜபாண்டி ஓட்டினார். சஜின் பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் அம்சி பகுதியில் சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பெயர் பலகையில் மோதியது. இதில் இரண்டு பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அவர்களை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜபாண்டி பரிதாபமாக இறந்தார். சஜினுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story