மாவட்டத்தில் மணல் கடத்திய 3 வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மணல் கடத்திய 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரை செல்வி தலைமையிலான போலீசார், சின்னபூங்குந்தி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது, சின்னபூங்குந்தி பகுதியில் இருந்து தேசப்பள்ளிக்கு, ஒரு யூனிட் மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய டிராக்டர் டிரைவர் மற்றும் உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சூளகிரி போலீஸ் நிலைய ஏட்டு அசோகன் மற்றும் போலீசார், காலிங்கவரம் கூட்டுரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் பஸ்தலப்பள்ளி பகுதியில் இருந்து, கர்நாடக மாநிலத்திற்கு லாரியில் 2 யூனிட் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மல்லப்புரம் பகுதியை சேர்ந்த டிரைவர் வேலு (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையிலான போலீசார், அஞ்செட்டி ஏரி அருகே ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் நிறுத்தினர். ஆனால் வேனில் வந்த நபர்கள் வண்டியை நிறுத்தி விட்டு தப்பியோடினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனில் சோதனை செய்தனர்.
அதில் அரை யூனிட் மணல் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், மணலுடன் வேனை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய டிரைவர் உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story