திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 2-வது நாளாக மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 2-வது நாளாக மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு நடைபெற்றது.
திருவாரூர்,
திருவாரூர் அருகே உள்ள நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள 14 மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத்தேர்வு நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. இந்த நுழைவு தேர்வின் மூலம் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு, ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்ட கல்வி ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
காலை 9 மணி முதல் 11 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 2 மணி வரையும் மற்றும் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையும் 3 பிரிவுகளாக நுழைவுத்தேர்வு நடைபெற்றது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் 4,284 மாணவர்கள் நடப்பு ஆண்டில் நுழைவுத் தேர்வு எழுதினர். பல்கலைக்கழகம் நடத்தும் 72 வகையான பாட பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது.
84 ஆயிரம் விண்ணப்பங்கள்
இதுகுறித்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.ரகுபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்க கடந்த ஆண்டு 60 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
நடப்பு ஆண்டில் 24 ஆயிரம் விண்ணப்பங்கள் அதிகமாக வந்தன. அதன்படி 84 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. இந்த கல்விஆண்டில் புதிதாக 4 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story