சேத்தியாத்தோப்பு அருகே தடுப்புக்கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதல்; தச்சுத்தொழிலாளி சாவு


சேத்தியாத்தோப்பு அருகே தடுப்புக்கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதல்; தச்சுத்தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 27 May 2019 3:30 AM IST (Updated: 27 May 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே தடுப்புக்கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தச்சு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அள்ளுர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு மகன் சீனிவாசன்(வயது 18). தச்சுத்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் சொந்த வேலை காரணமாக தனது தாய் மணிமேகலை மற்றும் தங்கையுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சேத்தியாத்தோப்புக்கு புறப்பட்டு சென்றார். சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று பாலத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக சீனிவாசன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்புக்கட்டையில் மோதியது. மோதிய வேகத்தில் 3 பேரும் சுமார் 20 அடிபள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்தனர். இதில் சீனிவாசன் பலத்த காயம் அடைந்தார். மணிமேகலை மற்றும் அவரது தங்கை லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்த தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலத்த காயம் அடைந்த சீனிவாசனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல்இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story