டயர் வெடித்ததால் சாலையோரம் கார் கவிழ்ந்தது 5 பேர் உயிர் தப்பினர்


டயர் வெடித்ததால் சாலையோரம் கார் கவிழ்ந்தது 5 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 27 May 2019 4:00 AM IST (Updated: 27 May 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கார் சென்றபோது முன்புறம் இடதுபுற டயர் திடீரென வெடித்து தாறுமாறாக ஓடி சாலையோரம் தலைக் குப்புற கவிழ்ந்தது.

ஆலங்குடி,

புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. காரில் பட்டுக்கோட்டையை சேர்ந்த பக்கிரிசாமி மகன் சுகுமார் உள்பட 5 பேர் பயணம் செய்தனர். வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கார் சென்றபோது முன்புறம் இடதுபுற டயர் திடீரென வெடித்து தாறுமாறாக ஓடி சாலையோரம் தலைக் குப்புற கவிழ்ந்தது. கார் மோதிய வேகத்தில் மைல்கல் தூக்கி வீசப்பட்டது. காருக்குள் 5 பேரும் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். உடனே, அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை உயிருடன் மீட்டனர். அவர்களில் சுகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் 5 பேரும், 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள வடகாடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றனர்.


Next Story