நிலக்கரி நிறுவனத்தில் பயிற்சிப்பணி
என்.எல்.சி.நிறுவனத்தில் டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. என்.எல்.சி. என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நிறுவனத்தில் தற்போது டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 170 பேர் சேர்க்கப்படுகிறார்கள்.
கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் அண்ட் கண்ட்ரோல், மெக்கானிக்கல், மைனிங் போன்ற என்ஜினீயரிங் பிரிவில் பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
பணியிடங்கள் உள்ள பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் இந்த பயிற்சிப் பணியிடங்களில் சேரலாம். விண்ணப்பதாரர்கள் பயிற்சிப் பணியாளர்கள் விதிமுறைக்கு உட்பட்ட வயது வரம்பை பெற்றிருக்க வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். முதலில் portal.mhrdnats.gov.in என்ற அப்ரண்டிஸிப் இணையதள பக்கத்தில் சென்று பெயரை பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஜூன் 2-ந் தேதி கடைசி நாளாகும். பின்னர் நிலக்கரி நிறுவன இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு கடைசிநாள் 4-6-2019-ந் தேதியாகும். இதுபற்றிய விரிவான விவரங்களை www.nlcindia.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
Related Tags :
Next Story