தமிழக மத்திய பல்கலைக் கழகத்தில் வேலை
மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. பேராசிரியர் பணிக்கு 21 பேரும், இணை பேராசிரியர் பணிக்கு 44 பேரும், உதவி பேராசிரியர் பணிக்கு 48 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். மொத்தம் 113 பணியிடங்கள் உள்ளன.
தோட்டக்கலை, சட்டம், உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு, புள்ளியியல், சுற்றுலா மற்றும் ஹாஸ்பிடலிட்டி மேனேஜ்மென்ட், மாஸ் கம்யூனிகேசன், லைப் சயின்ஸஸ், லைபிரரி அண்ட் இன்பர்மேசன் சயின்ஸ் உள்ளிட்ட 28 பாடப்பிரிவுகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. பணியிடங்கள் உள்ள பிரிவில் முதுநிலை பட்டப்படிப்புடன், முனைவர் பட்டம் பெற்றவர்கள், எம்.பில். படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விருப்பமுள்ளவர்கள் ரூ.750 கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.500 கட்டணம் செலுத்தினால் போதும்.
இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் 21-6-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.ugc.ac.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story