ஸ்டேட் வங்கியில் 641 சிறப்பு அதிகாரி பணிகள்
ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 641 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பாரத ஸ்டேட் வங்கி. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் இந்த வங்கியில் தற்போது சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. ‘ரிலேசன்ஷிப் மேனேஜர்’ பிரிவில் 486 இடங்கள் உள்பட 8 பிரிவுகளில் அதிகாரி பணிக்கு 579 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. ‘ரிலேசன்ஷிப்’ அதிகாரி பணிக்கு 23 வயது முதல் 35 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணியிடங்களில் அதிகபட்சம் 50 வயதுடையவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது.
கல்வித்தகுதி
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்து, குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு ரிலேசன்ஷிப் அதிகாரி உள்பட பல பிரிவு பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன. எம்.பி.ஏ. மற்றும் முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ரிசர்ச் ஹெட் பணியிலும், சென்ட்ரல் ரிசர்ச் டீம் பணியிலும் வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கு சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.
கட்டணம்
பொது, ஓ.பி.சி. மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.750 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.125 கட்டணம் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 12-ந் தேதியாகும்.
62 பணிகள்
மற்றொரு அறிவிப்பின்படி சிறப்பு அதிகாரி தரத்திலான மருத்துவ அதிகாரி மற்றும் அனலிஸ்ட் பணிக்கு 62 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் மருத்துவ அதிகாரி பணிக்கும், சி.ஏ., எம்.பி.ஏ., படித்தவர்கள் அனலிஸ்ட் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 12-6-2019-ந் தேதியாகும்.
விருப்பமுள்ளவர்கள் இவை பற்றிய விரிவான விவரங்களை www.sbi.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
Related Tags :
Next Story