காது பரிசோதனைக்கு ஒரு அப்ளிகேசன்


காது பரிசோதனைக்கு ஒரு அப்ளிகேசன்
x
தினத்தந்தி 27 May 2019 4:34 PM IST (Updated: 27 May 2019 4:34 PM IST)
t-max-icont-min-icon

வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் மருத்துவ கல்லூரியை சேர்ந்த உதவி பேராசிரியர் ராண்ட்ஆல் பிளை, காது பரிசோதனையை எளிமையாக செய்யும் செல்போன் அப்ளிகேசனை உருவாக்கி உள்ளார்.

குழந்தைகள் திடீரென தாறுமாறாக அழுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். அதில் சளித்தொல்லையால் ஏற்படும் காது அடைப்பு, காதில் நோய்த்தொற்று உள்ளிட்ட பாதிப்புகள் முக்கியமானவை.

மற்ற பாதிப்புகளை ஓரளவு அறிய முடியும்போது உள்காதில் ஏற்படும் இந்த பாதிப்பை நம்மால் எளிதில் உணர முடியாது, குழந்தைகளாலும் உணர்ந்து சொல்ல முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில் எளிய பரிசோதனை மூலம் காது பாதிப்புகளை காட்டிக் கொடுக்கிறது இந்த அப்ளிகேசன்.

வவ்வால்களின் எதிரொலி முறையில் செயல்படுகிறது இந்த நுட்பம். சிறிய துண்டு காகிதத்தை கூம்புபோல செய்து, செல்போனுடன் சேர்த்து காதில் வைத்தால் இந்த அப்ளிகேசன் காதின் ஒலிகடத்தல் அதிர்வுகளை பதிவு செய்து பாதிப்புகளை காட்டிக் கொடுக்கும். வெற்றிகரமாக செயல்படும் இந்த அப்ளிகேசனை மருத்துவரீதியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிகள் நடக்கிறது.

Next Story