கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் குடிநீர் வசதி, மின்சார வசதி, பட்டா, கல்வி உதவித்தொகை, ஓய்வூதிய தொகை, இலவச தையல் எந்திரம், சலவை பெட்டி, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 158 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தேர்தல் நடத்தை விதிகளின் காரணமாக கடந்த 2½ மாதங்களாக பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை.
இந்த கால கட்டத்தில் பொதுமக்களின் மனுக்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பெட்டியில் போடலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி இந்த 2½ மாத காலத்தில் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் 1,400 மனுக்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நேற்றைய குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குணசேகரன், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் சேது ராமலிங்கம், உதவி ஆணையர் (ஆயம்) முரளி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story