திருமண ஆசை காட்டி பெண்ணிடம் உல்லாசம்: அரசு பள்ளி ஆசிரியர் கைது
மன்னார்குடியில், திருமண ஆசை காட்டி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மகள் தேவி(வயது 24).(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). மன்னார்குடி அருகே உள்ள துண்டகட்டளை கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் சதீஷ்குமார்(31). இவர் திருவண்ணாமலை மாவட்டம் நடுப்பட்டு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தேவியும், சதீஷ்குமாரும் உறவினர்கள் என்பதால் அடிக்கடி தேவி வீட்டுக்கு சதீஷ்குமார் சென்று வந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் சதீஷ்குமார், தேவியிடம் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
கைது
மேலும் சதீஷ்குமார், திருவண்ணாமலையில் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் தேவியை சேர்த்து படிக்க வைத்தார். அப்போது இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படிப்பு முடிந்த பின் தேவியை சதீஷ்குமார் திருமணம் செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தேவி இது குறித்து மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சதீஷ்குமாரை கைது செய்து மன்னார்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story