பதுக்கி வைத்திருந்த பட்டாசு பறிமுதல்; 4 பேர் கைது
சிவகாசியில் பதுக்கிவைத்திருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.
சிவகாசி,
அனுமதியின்றி பட்டாசுகளை இருப்பு வைக்கக் கூடாது என்று விதி இருந்தும் சிலர் அனுமதி பெறாமல் வீடுகளில் பட்டாசுகளை பதுக்கி வைக்கின்றனர். இதனால் பல நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி பலரை கைது செய்து நடவடிக்கை எடுத்துவந்தாலும் சிலர் தொடர்ந்து பட்டாசுகளை பதுக்கி வைக்கின்றனர்.
இந்த நிலையில் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.
இதில் சேவுகன் (வயது 48), தங்கமுனியப்பன் (36), காளிராஜ் (51), கார்த்தீஸ்வரன் (45) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனை தொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story