பெருந்துறையில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு


பெருந்துறையில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
x
தினத்தந்தி 29 May 2019 3:45 AM IST (Updated: 28 May 2019 8:46 PM IST)
t-max-icont-min-icon

பெருந்துறையில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தை மாவட்ட கலெக்டர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெருந்துறை,

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவை பணிக்கம்பாளையத்தில் கொட்டப்பட்டு வந்தன. இந்த நிலையில் பெருந்துறை பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. இந்த திட்டத்துக்காக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பணிக்கம்பாளையம் குப்பைக்கிடங்கில் ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலத்தை கையகப்படுத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த குப்பைகள் ரூ.89 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் அப்புறப்படுத்தப்பட்டன. குப்பைகள் முற்றிலும் அகற்றப்பட்ட பின்னர் அந்த இடம் கையகப்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தை மாவட்ட கலெக்டர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த இடத்துக்கான வரைபடத்தையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கணேஷ்ராம், உதவி செயற்பொறியாளர் லலிதாமணி, குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் மணிவண்ணன், பேரூராட்சி செயல் அதிகாரி கணேசன் உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story