காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 28 May 2019 10:45 PM GMT (Updated: 28 May 2019 6:20 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார்.

காஞ்சீபுரம்,

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் பலர் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதனையடுத்து வருவாய்த்துறை சார்பாக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 15 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் எடையர்பாகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாபு என்பவருக்கு 3 சக்கர வண்டியையும், குப்பன் என்பவருக்கு இரு சக்கர நாற்காலியையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் வி.சுமதி, உதவி ஆணையர் (கலால்) எம்.பாலகிருஷ்ணா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நில எடுப்பு சக்திவேல் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அதிகாரி ஜவகர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி எல்.தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story