மணல்மேடு அருகே உயர்மட்ட பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மணல்மேடு அருகே உயர்மட்ட பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மணல்மேடு,
நாகை மாவட்டம், மணல்மேடு அருகே உள்ள வக்காரமாரிக்கும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் முட்டத்திற்கும் இடையே கடந்த 2011-13-ம் ஆண்டு ரூ.48 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கடந்த 2015-ம் ஆண்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை இந்த பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வக்காரமாரி கிராமத்தில் உள்ள ஒரு குறுகிய தெருவின் வழியாக வாகனங்கள் சென்று பாலத்தை அடைகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கும் சிரமமாக உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
இணைப்பு சாலை
இந்த பாலம் கட்டப்பட்டு 6 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இதுவரை இணைப்பு சாலை அமைக்கப்படவில்லை. மேலும் பாலம் தொடங்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையும் வளைவாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் இருபுறமும் உள்ள தடுப்புச் சுவரில் செடி-கொடிகள் வளர்ந்து புதர்போல மண்டி கிடக்கிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. மேலும், இரவு நேரங்களில் மதுகுடிப்பவர்கள் பாலத்தில் அமர்ந்து மதுகுடித்துவிட்டு மதுபாட்டில்களை அங்குள்ள சாலை மற்றும் நடைபாதையில் உடைத்து செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. பாலத்திற்கு இணைப்பு சாலை இல்லாததால் பாலத்தை அடைய தெருக்களின் வழியாக அதிக வாகனங்கள் செல்கிறது. இதனால் அந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், வீடுகளில் புழுதிகள் படிவதுடன், குடிநீர், உணவு பொருட்களிலும் புழுதிகள் படிந்து சுகாதாரமற்ற நிலை உள்ளது.
இதேபோல் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த கிராம சாலையின் வழியே செல்வதால் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும், அடிக்கடி வாகன விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே, உயர்மட்ட பாலத்திற்கு உடனே இணைப்புசாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று எதிர்பார்க்கிறோம். மேலும், பாலம் தொடங்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையின் இருபுறமும் உள்ள தடுப்புச்சுவரில் வளர்ந்துள்ள செடி-கொடிகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story