கனிமொழி எம்.பி. நாளை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்


கனிமொழி எம்.பி. நாளை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்
x
தினத்தந்தி 28 May 2019 10:30 PM GMT (Updated: 28 May 2019 7:07 PM GMT)

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. நாளை (வியாழக்கிழமை) வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. நாளை (வியாழக்கிழமை) வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

இது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கனிமொழி எம்.பி. நாளை(வியாழக்கிழமை), நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்களும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

நன்றி தெரிவிக்கிறார்

நாளை(வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் என்.பெரியசாமி நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து முத்துராமலிங்கதேவர், அம்பேத்கர், பெரியார், அண்ணா, குரூஸ்பர்ணாந்து, வ.உ.சி, மகாத்மாகாந்தி, இந்திராகாந்தி, காமராஜர் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு போல்பேட்டை, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள போத்திவிநாயகர் ஆலயம் முன்பு இருந்து சுற்றுபயணத்தை தொடங்குகிறார். போல்பேட்டை கிழக்கு, மேற்கு, நந்தகோபாலபுரம், செல்வநாயகபுரம், சக்திவிநாயகர்புரம், அழகேசபுரம், அம்பேத்கார்நகர், சுந்தரவேல்புரம், கிருஷ்ணராஜபுரம், பொன்னகரம், முத்து கிருஷ்ணாபுரம், பூபால்ராயர்புரம், எஸ்.எஸ். மாணிக்கபுரம், முருகன் தியேட்டர், லூர்தம்மாள்புரம், மேட்டுப்பட்டி, திரேஸ்புரம், குருஸ்புரம், மட்டக்கடை, எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட,் 2-ம் கேட், சிவன்கோவில் தெரு, ரங்கநாதபுரம், பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், கே.வி.கே.நகர் வழியாக அண்ணாநகரில் நிறைவு செய்கிறார். இந்த நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story