மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளைமறுநாள் நடக்கிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்கிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
அம்மா திட்ட முகாம்
அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசு, அம்மா திட்ட சிறப்பு முகாமை வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடத்தி வருகிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
அதன்படி தூத்துக்குடி தாலுகா மீளவிட்டான் பகுதி - 2 கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா பேரூர் கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகா காயாமொழியிலும், சாத்தான்குளம் தாலுகா கருங்கடல் கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகா கழுகுமலையிலும், விளாத்திகுளம் தாலுகா குறளையம்பட்டியிலும், எட்டயபுரம் தாலுகா செமப்புதூரிலும், ஓட்டப்பிடாரம் தாலுகா சில்லாங்குளத்திலும், கயத்தாறு தாலுகா கே.குமாரபுரத்திலும், ஏரல் தாலுகா குருகாட்டூரிலும் முகாம் நடக்கிறது.
குறைகளை தெரிவிக்கலாம்
இந்த முகாம்களில் மக்கள் குறைகளை தீர்க்கும் வகையில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்பட உள்ளன. எனவே மக்கள் இந்த முகாம்களில் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story