மணப்பாட்டில் மீன் பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும் மீனவர்கள் கோரிக்கை


மணப்பாட்டில் மீன் பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும் மீனவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 May 2019 3:00 AM IST (Updated: 29 May 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாட்டில் மீன் பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

உடன்குடி, 

மணப்பாட்டில் மீன் பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

மணப்பாடு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா உடன்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மணப்பாடு. இது கடலோர கிராமம். இங்கு சுமார் 2ஆயிரம் மீனவ குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் 2 முறை கடலில் மீன் பிடிக்க செல்கிறார்கள். அதிகாலை 2 மணிக்கு சென்றுவிட்டு காலை 6 மணிக்கு கரை திரும்புவார்கள்.

மற்றொரு முறையாக மீனவர்கள் மாலை 6 மணிக்கு சென்றுவிட்டு மறுநாள் காலை 6 மணிக்கு கரை திரும்புவார்கள்.

மணப்பாடு கடலில் சாளை மீன், சீலா மீன், வாளை, பாறை, சுறா, சிங்கி இறால், நெத்திலி, காரல் என பலவகையான மீன்கள் கிடைக்கின்றன. இங்கு உள்ள மீனவர்கள் மீன்களை பிடிக்க பருவலை, சிறு வலை என 2 வகை வலைகளை பயன்படுத்துகிறார்கள்.

பதப்படுத்தும் நிலையம்

இங்கு பிடிக்கப்படும் மீன்கள் கரைக்கு கொண்டு வந்த உடன் மீன் வியாபாரிகள் மூலம் ஏலம் விடப்பட்டு மீன் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று தாமதமாக கொண்டு வரப்படும் மீன்களையும், ஏலம் போகாத மீன்களையும் வைக்க ஒரு பதப்படுத்தும் நிலையம் இல்லை என்பது பெரிய குறையாக உள்ளது. இதனால் மீனவர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே ஏலம் போகாத மீன்களையும், கடைசி நேரத்தில் பிடித்து வரப்படும் மீன்களையும் பாதுகாக்க அரசு சார்பில் மணப்பாட்டில் மீன் பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Next Story