காட்டுமன்னார்கோவில் அருகே, தொழிலாளி, தூக்குப்போட்டு தற்கொலை - திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் விரக்தி
காட்டுமன்னார்கோவில் அருகே திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் விரக்தியடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ராஜசூடாமணி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். இவருடைய மகன் கனகவேந்தன் (வயது 25), தொழிலாளி. தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கூறிவந்ததாக தெரிகிறது.
அதன்படி, கனகவேந்தனுக்கு பெற்றோர் பெண் பார்க்கும் படலத்தில் இறங்கினர். ஆனால் அவருக்கு பெண் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த கனகவேந்தன் வாழ்க்கையை வெறுத்து விரக்தியடைந்து புலம்பி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் வீட்டில் நைலான் கயிற்றால் கனகவேந்தன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, கனகவேந்தன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கனகவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கொளஞ்சியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story