திருவாரூர்-காரைக்குடி அகல பாதையில் ‘டெமு’ ரெயில் சேவை வருகிற 1-ந் தேதி தொடக்கம்
திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதையில் ‘டெமு’ ரெயில் சேவை வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது.
திருச்சி,
திருவாரூர்-காரைக்குடி இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகலப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே பணிகள் முடிவடைந்து ‘டெமு’ ரெயில் இயக்கப்பட்டது. அதன்பின் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக திருவாரூர்-பட்டுக்கோட்டை அகல பாதை பணிகள் தற்போது முடிவடைந்து ரெயில்கள் இயக்க ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்தார். மேலும் இந்த வழித்தடத்தில் போதுமான ஊழியர்களை நியமிக்க அவர் அறிவுறுத்தியிருந்தார்.
ரெயில் சேவை தொடங்குகிறது
இதைத்தொடர்ந்து திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதையில் ‘டெமு’ ரெயில் சேவை வருகிற 1-ந் தேதி முதல் தொடங்குகிறது. வருகிற 1-ந் தேதியில் இருந்து ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி வரை சோதனை அடிப்படையில் ரெயில் இயக்கப்பட உள்ளது. வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்பட உள்ளது.
திருவாரூரில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு பகல் 2.15 மணிக்கு சென்றடையும். பின்னர் மீண்டும் காரைக்குடியில் இருந்து பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு இரவு 8.30 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில் மாங்குடி, மாவூர் ரோடு, திருநெல்லிக்காவல், அம்மனூர், அலட்டாம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துபேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டன்காடு, பேராவூரணி, அய்யன்குடி, அறந்தாங்கி, வளரமாணிக்கம், கண்டனூர்புதுவயல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
102 கேட்டுகள்
திருவாரூர்-காரைக்குடி இடையே அகல பாதையில் 102 ரெயில்வே கேட்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கேட்டுகளின் அருகே வரும்போது ரெயிலை நிறுத்தி என்ஜினில் இருந்து ஒரு ஊழியர் இறங்கி கேட்டை மூடியபின் அந்த கேட்டை ரெயில் கடந்து செல்லும். அதன்பின் கார்டு பெட்டியில் இருந்து ஒரு ஊழியர் இறங்கி சாலை போக்குவரத்திற்காக ரெயில்வே கேட்டை திறந்துவிட்டு ரெயிலில் ஏறி பயணிப்பார்.
இதுபோன்று ஒவ்வொரு கேட்டிலும் ரெயில் நின்று செல்லும் என ரெயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர். இதனால் பயண நேரம் கூடுதலாகும். எனவே ரெயில்வே கேட்டுகளில் ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகத்தினருக்கு பயணிகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story