மாவட்டம் முழுவதும் ஜமாபந்தியில் 477 மனுக்கள் குவிந்தன குமாரபாளையத்தில் கலெக்டர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 8 தாசில்தார் அலுவலகங்களில் நடந்த ஜமாபந்தியில் மொத்தம் 477 மனுக்கள் குவிந்தன. குமாரபாளையத்தில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் ஆசியா மரியம் கலந்து கொண்டார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாசில்தார் அலுவலகங்களிலும் நேற்று ஜமாபந்தி நடைபெற்றது. குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார்.
இதில் ஆனங்கூர், மோடமங்கலம், மோடமங்கலம் அக்ரஹாரம், காடச்சநல்லூர், புதுப்பாளையம் அக்ரஹாரம் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 34 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து ஜமாபந்தி முடிவதற்குள் சம்பந்தப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அவர் கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள கிராம புலப்பட நகல் பதிவேடு, கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பதிவேடுகளை தனித்தனியே பார்வையிட்டு சரிபார்த்தார். மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்கள் பகுதியில் ஆக்கிரமிப்பு ஏதேனும் இருந்தால், அதுகுறித்து உடனடியாக தாசில்தார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து குமாரபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட 11 பயனாளிகளுக்கு புதிய மின்னணு ரேஷன் கார்டுகளை கலெக்டர் வழங்கினார்.
இதில் உதவி இயக்குனர் (நிலஅளவை) சிவகுமார், நாமக்கல் கோட்ட ஆய்வாளர் ரகுநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயலட்சுமி, மாவட்ட கலெக்டரின் அலுவலக மேலாளர் சுகுமார், குமாரபாளையம் தாசில்தார் தங்கம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கதிரேசன், துணை தாசில்தார்கள் பிரகாஷ், சிவகுமார் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இன்று (புதன்கிழமை) ஓடப்பள்ளி அக்ரஹாரம், பாப்பம்பாளையம், கலியனூர், கலியனூர் அக்ரஹாரம், எலந்தகுட்டை ஆகிய வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடக்கிறது.
நேற்று குமாரபாளையம் ஜமாபந்தியில் 34 மனுக்களும், நாமக்கல்லில் நடந்த ஜமாபந்தியில் 48 மனுக்களும், மோகனூர் மற்றும் பரமத்திவேலூரில் நடந்த ஜமாபந்திகளில் தலா 62 மனுக்களும், சேந்தமங்கலத்தில் நடந்த ஜமாபந்தியில் 74 மனுக்களும், ராசிபுரத்தில் நடந்த ஜமாபந்தியில் 114 மனுக்களும், திருச்செங்கோட்டில் நடந்த ஜமாபந்தியில் 51 மனுக்களும், கொல்லிமலையில் நடந்த ஜமாபந்தியில் 32 மனுக்களும் என மொத்தம் 477 மனுக்கள் பெறப்பட்டன.

Related Tags :
Next Story