கூட்டணி ஆட்சிக்கு எழுந்துள்ள சிக்கலை தீர்க்க காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம்நபி ஆசாத் பெங்களூரு வருகை
கூட்டணி ஆட்சிக்கு எழுந்துள்ள சிக்கலை தீர்க்க காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் பெங்களூரு வந்தார்.
பெங்களூரு,
கூட்டணி ஆட்சிக்கு எழுந்துள்ள சிக்கலை தீர்க்க காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் பெங்களூரு வந்தார்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. குமாரசாமி முதல்-மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாகவும் பணியாற்றி வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளனர்.
அதன் தொடக்கமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, சுதாகர் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் அக்கட்சியின் தலைவர்களை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தினர்.
குலாம்நபிஆசாத்
இதனால் கூட்டணி அரசுக்கு சிக்கல் எழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உஷாராகியுள்ள முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கூட்டணி அரசுக்கு எழுந்துள்ள சிக்கலை தீர்க்க ராகுல் காந்தியின் உத்தரவின் பேரில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபிஆசாத், மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் நேற்று பெங்களூரு வந்தனர்.
மந்திரிசபை விரிவாக்கம்
அவர்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அடுத்த சில நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற உள்ளது. காலியாக உள்ள 3 இடங்களுக்கு மந்திரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
கர்நாடக சட்டசபையில் பா.ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு 79 பேர், ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 37 பேர், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒருவர் மற்றும் சுயேச்சைகள் 2 பேர் உள்ளனர்.
Related Tags :
Next Story