போலீசார் துரத்தியதால் கிணற்றில் விழுந்த பிரபல கொள்ளையன் - அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
சேலம் அருகே போலீசார் துரத்தியதால் கிணற்றில் விழுந்த பிரபல கொள்ளையனால் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த அவனுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருப்பூர்,
சேலம் கருப்பூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டியில் நேற்று முன்தினம் நள்ளிரவு கருப்பூர் போலீஸ் நிலைய ஏட்டுகள் முத்துசாமி, பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாமிநாயக்கன்பட்டி பிரிவு சாலையில் மர்மஆசாமிகள் 2 பேர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர். இதைப்பார்த்த போலீசார், உடனே 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணைநடத்தினர்.
இதனிடையே அவர்கள் 2 பேரும் திடீரென மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை மோட்டார் சைக்கிளில் சென்று பிடிக்க முயன்றனர். அந்த சமயத்தில் சாலையில் இருந்த வேகத்தடையில் மர்ம ஆசாமிகளின் மோட்டார் சைக்கிள் வேகமாக ஏறி இறங்கியது. இதில் நிலை தடுமாறி அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதையடுத்து அவர்கள் போலீசார் பிடியில் சிக்காமல் இருக்க மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினர். அவர்களை துரத்தி பிடிக்க போலீசார் முயன்றனர்.
இதைத்தொடந்து அந்த பகுதியில் ஒரு கிணறு இருப்பது தெரியாமல் அதற்குள் தப்பி ஓடியவர்களில் ஒருவர் தவறி விழுந்து விட்டார். அந்த கிணற்றில் குறைந்தளவு தண்ணீர் இருந்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக உள்ளே விழுந்தவர் காயத்துடன் உயிருக்கு போராடினார். அவருடன் வந்த மற்றொரு நபர் இருட்டில் போலீசாருக்கு தெரியாமல் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசார் ஓமலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கிணற்றிற்குள் விழுந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றில் விழுந்த நபர், சேலம் 3 ரோடு ஜவகர்மில் திடல் பின்புறம் உள்ள கோடிப்பள்ளம் பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் சங்கர் (வயது 40) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில், சங்கர் மற்றும் தப்பி ஓடிய அவருடைய நண்பர் கோவையை சேர்ந்த நெல்சன் (35) ஆகியோர் சாமிநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டில் திருட வந்ததும், இவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்கள் எங்கெல்லாம் கைவரிசை காட்டியுள்ளனர் என்பது குறித்தும், தப்பி ஓடிய நெல்சன் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story