எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி அசோக் சவான் குற்றச்சாட்டு
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் குற்றம் சாட்டினார்.
மும்பை,
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சிகள் ஆலோசனை
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான ராதாகிருஷ்ண விகேபாட்டீலின் மகன் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜனதாவில் இணைந்தார்.
இதையடுத்து தனது சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராதாகிருஷ்ண விகேபாட்டீல், மேலும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்கள் நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
பின்னர் நிருபர்களை சந்தித்த மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவானிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
இழுக்க முயற்சி
தொழில்நுட்ப ரீதியாக ராதாகிருஷ்ண விகேபாட்டீல் தற்போது காங்கிரஸ் கட்சியில் தான் உறுப்பினராக உள்ளார். அவர் வேண்டுமானால் ஆளும் பா.ஜனதாவில் இணைய வாய்ப்புள்ளது. எங்கள் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைவார்கள் என நான் நம்பவில்லை.
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறது. ஆனால் என்னை பொருத்தவரை அப்படி நடக்க வாய்ப்பில்லை. நாங்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story