வானவில் : சுஸுகி ஜிக்ஸர் ‘எஸ்.எப் 250’ அறிமுகம்
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சுஸுகி நிறுவன மோட்டார் சைக்கிளில் 250 சி.சி. திறன் கொண்ட ஜிக்ஸர் எஸ்.எப் 250 இப்போது அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூ.1.71 லட்சமாகும்.
சில வாரங்களுக்கு முன்பு 150 சி.சி. மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்த இந்நிறுவனம் தற்போது உயர்திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. 249 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டருடன் ஆயில் கூல்டு என்ஜினைக் கொண்டுள்ளதாக இது வந்துள்ளது. 26 ஹெச்.பி. திறன் 22.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்ட இது 6 கியர்களைக் கொண்டதாக வந்துள்ளது. இதன் மொத்த எடை 161 கிலோவாகும்.
இதில் டெலஸ்கோப்பிக் போர்க் முன் பக்கத்திலும் பின்சக்கரத்துக்கு மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. இரண்டு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது, அதுவும் ஏ.பி.எஸ். வசதி,இதன் முகப்பு விளக்கு முழுவதும் எல்.இ.டி.யால் ஆனது. கிளிப் ஆன் ஹாண்டில் பார், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இரட்டை இருக்கை, இரண்டு எக்ஸாஸ்ட், 17 அங்குல அலாய், ஸ்போக் சக்கரங்களுடன் டியூப்லெஸ் டயர்களைக் கொண்டதாக இது வந்துள்ளது. இளைய தலைமுறையினரை வெகுவாகக் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
Related Tags :
Next Story