கலசபாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி


கலசபாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 30 May 2019 4:30 AM IST (Updated: 29 May 2019 10:35 PM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் செங்கல் சூளை உரிமையாளர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கலசபாக்கம், 

கலசபாக்கத்தை அடுத்த எள்ளுப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 41). இவர், அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்தார். இவருடைய உறவினர் ரமேஷ் (35). இருவரும் பாடகம் கிராமத்தில் நடைபெற்ற கூழ்வார்க்கும் திருவிழாவிற்காக சென்றிருந்தனர்.

இதையடுத்து இருவரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் எள்ளுபாறைக்கு திரும்பினர். காங்கேயனூர் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கமலக்கண்ணன், ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த கலசபாக்கத்தை அடுத்த 99 புதுப்பாளையத்தை சேர்ந்த துரைராஜி என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story