அ.ம.மு.க. மீண்டும் எழுச்சி பயணத்தை தொடங்கி விட்டது தஞ்சையில், டி.டி.வி. தினகரன் பேச்சு
அ.ம.மு.க. மீண்டும் எழுச்சி பயணத்தை தொடங்கி விட்டது என்று தஞ்சையில், டி.டி.வி. தினகரன் கூறினார்.
தஞ்சாவூர்,
அ.ம.மு.க. மாநில பொருளாளரும், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான எம்.ரெங்கசாமி இல்ல திருமண விழா தஞ்சையில் நேற்று நடந்தது. விழாவுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை தாங்கினார்.
விழாவில் மணமக்களை வாழ்த்தி டி.டி.வி.தினகரன் பேசியதாவது:–
தேர்தல் முடிவுக்குப்பிறகு தஞ்சை மண்ணில் மீண்டும் நமது எழுச்சி பயணத்தை இந்த மங்களகரமான நாளில் இருந்து தொடங்கி உள்ளோம். எத்தனை சோதனைகள் வந்தாலும், நம்மை அரசியல் ரீதியாக, நமது இயக்கத்தை வீழ்த்தி விடலாம் என நினைப்பவர்கள் இப்போது வேண்டுமானால் அற்ப சந்தோஷம் அடையலாம். வருங்காலம் நமது ஆட்சிதான் என்பதை நிரூபிக்கும் வரை தொடர்ந்து நாம் செயல்படுவோம். தமிழகத்தில் அனைத்து திட்டங்களையும் ஜெயலலிதா வழியில் நிறைவேற்றி தர தொடர்ந்து செயல்படுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story