தனியார் நிறுவன தொழிலாளி விஷவாயு தாக்கி சாவு மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார்


தனியார் நிறுவன தொழிலாளி விஷவாயு தாக்கி சாவு மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார்
x
தினத்தந்தி 30 May 2019 4:30 AM IST (Updated: 29 May 2019 11:51 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே தனியார் நிறுவன தொழிலாளி விஷவாயு தாக்கி இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் பெற்றோர் புகார் செய்துள்ளனர்.

கயத்தாறு, 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கம். இவர் கயத்தாறு பகுதியில் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். அவருடைய மகன் சுரேஷ் (வயது 27). இவர் நெல்லை அருகே கங்கைகொண்டானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்சில் ஏறி வேலைக்கு சென்றார். அங்கு பாய்லர் பகுதிக்கு சென்றபோது அவரை விஷவாயு தாக்கியதாகவும், இதனால் அவர் மூச்சுத்திணறி கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. அவரை மீட்டு நெல்லையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பதறி அடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

நேற்று மாலை கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்துக்கு சுரேசின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்தனர். தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக தங்கம் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுரேசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story