நான்கு வழி சாலைக்கு நில அளவை பணி: வீட்டை இழந்து விடுவோம் என்ற வேதனையில் விவசாயி சாவு
சீர்காழி அருகே நான்கு வழி சாலைக்கு நில அளவீடு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் தனது வீட்டை இழந்து விடுவோம் என்ற வேதனையில் விவசாயி இறந்தார்.
திருவெண்காடு,
நாகை மாவட்டம் சீர்காழி அருகே அல்லிவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 75). விவசாயி. இவர் தனது மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை 180 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்த நான்கு வழி சாலை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் நிலம் கையகப்படுத்தப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும். வீடுகளில் குடியிருப்போர் பாதிக்கப்படுவர் என்று கூறி பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அல்லிவிளாகம் பகுதியில் நான்கு வழி சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் நில அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நில அளவை பணியின்போது நாகப்பன் மற்றும் அவரது மகன்களுக்கு சொந்தமான 4 வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளது தெரிய வந்தது. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த நாகப்பனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதனை அறிந்த நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் நாகப்பன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நான்கு வழி சாலைக்கு நில அளவை பணியால் வேதனை அடைந்து விவசாயி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story