திருவாரூர் புதிய பஸ்நிலையம் பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


திருவாரூர் புதிய பஸ்நிலையம் பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 May 2019 4:00 AM IST (Updated: 30 May 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் போதிய வசதிகள் இன்றி பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. பிரதான சாலையில் பஸ் நிலையம் அமைந்து இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வந்தது. இந்தநிலையில் திருவாரூர் விளமல் கல்பாலம் அருகில் தஞ்சை பிரதான சாலையில் ரூ.13 கோடியே 36 லட்சம் மதிப்பிலான புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

வேளாங்கண்ணி, நாகூர், திருச்சி போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கு முக்கிய சந்திப்பு பகுதியாக திருவாரூர் பஸ் நிலையம் அமைந்துள்ளதால் தொடர்ச்சியாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தஞ்சை பிரதான சாலையில் இருந்து பஸ்கள் புதிய பஸ் நிலையம் உள்ளே செல்வதிலும், பஸ் நிலையத்தில் இருந்து வெளியில் செல்வதிலும் சிரமங்கள் இருந்து வருகிறது. தஞ்சை பிரதான சாலை என்பதால் ஏராளமான வாகன போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாக இருந்து வருகிறது.

ரவுண்டானா

தஞ்சை சாலை தேசிய நெடுஞ்சாலை என்பதால் நிமிடத்திற்கு வாகனங்கள் வேகமாக கடந்து செல்லும் பகுதியாக இருந்து வருகிறது. எனவே இந்த இடத்தில் பஸ் நிலையம் உள்ளதற்கான எச்சரிக்கை பலகை, வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி வாகன நெருக்கடியும், விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே அதிகமான பஸ்கள் பயன்பாட்டில் உள்ளதால் புதிய பஸ் நிலையம் இணைப்பு தஞ்சை சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story