சயான் ஆஸ்பத்திரி சீரமைப்பு பணி விரைவில் தொடங்கும் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.விடம் மாநகராட்சி கமிஷனர் உறுதி


சயான் ஆஸ்பத்திரி சீரமைப்பு பணி விரைவில் தொடங்கும் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.விடம் மாநகராட்சி கமிஷனர் உறுதி
x
தினத்தந்தி 30 May 2019 5:00 AM IST (Updated: 30 May 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

சயான் ஆஸ்பத்திரி சீரமைப்பு பணி விரைவில் தொடங்கும் என கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.விடம் மாநகராட்சி கமிஷனர் உறுதி அளித்தார்.

மும்பை, 

சயான் ஆஸ்பத்திரி சீரமைப்பு பணி விரைவில் தொடங்கும் என கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.விடம் மாநகராட்சி கமிஷனர் உறுதி அளித்தார்.

சயான் ஆஸ்பத்திரி

சயானில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரி மும்பையில் மிக முக்கியமான ஆஸ்பத்திரிகளில் ஒன்று. இங்கு தினசரி ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் பலர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இந்த ஆஸ்பத்திரியில் போதிய படுக்கை வசதிகள் இல்லை. அவசர சிகிச்சை வார்டில் கூட ஒரே படுக்கையில் 2 நோயாளிகள் படுக்க வைக்கப்படுகிறார்கள் என குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

எனவே கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி சயான் ஆஸ்பத்திரியில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. சட்டசபையில் குரல் கொடுத்தார்.

விரைவில் பணிகள் தொடங்கும்

இதையடுத்து சயான் ஆஸ்பத்திரியை மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் சீரமைத்து கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ஆஸ்பத்திரியில் 2 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல் அளித்தார். முதல்-மந்திரி ஒப்புதல் அளித்த பிறகும் இந்த திட்டப்பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

3 ஆண்டுகளாக இந்த பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ள நிலையில், நேற்று மாநகராட்சியில் கமிஷனர் பிரவீன் பர்தேஷி தலைமையில் இது தொடர்பான கூட்டம் நடந்தது. அப்போது, சயான் ஆஸ்பத்திரி சீரமைப்பு பணிகளை செய்வதற்காக டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ள கமிஷனர் அனுமதி அளித்தார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.விடம், விரைவில் சயான் ஆஸ்பத்திரி சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என கமிஷனர் உறுதி அளித்தார்.

Next Story