ரூ.21 கோடி செலவில் மித்தி ஆற்றை சுற்றுலா தலமாக மேம்படுத்த மாநகராட்சி முடிவு படகு சேவையும் விடப்படுகிறது
ரூ.21 கோடி செலவில் மித்தி ஆற்றை சுற்றுலா தலமாக மேம்படுத்த மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. மேலும் படகு சேவையும் விடப்படுகிறது.
மும்பை,
ரூ.21 கோடி செலவில் மித்தி ஆற்றை சுற்றுலா தலமாக மேம்படுத்த மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. மேலும் படகு சேவையும் விடப்படுகிறது.
மித்தி ஆறு
மும்பையின் பெரிய கழிவுநீர் கால்வாயான மித்தி ஆறு பவாய் ஏரியில் தொடங்குகிறது. சாக்கிநாகா, குர்லா, கலினா, வகோலா, பாந்திரா-குர்லா காம்ப்ளக்ஸ், தாராவி மற்றும் மாஹிம் வழியாக 18 கி.மீ. ஓடியபின் அரபிக் கடலில் சங்கமிக்கிறது. நகரின் பிரதான வெள்ளநீர் வடிகாலாக விளங்கும் மித்தி ஆற்றில் குப்பைகளும், தொழிற்சாலை கழிவுகளும் ஆற்றில் தடையின்றி கொட்டப்படுகின்றன.
இதன் எதிர்விளைவை கடந்த 2005-ம் ஆண்டு பருவமழையின் போது மும்பைவாசிகள் உணர்ந்தனர். மித்தி ஆற்றில் வியாபித்து இருந்த கழிவுகளால் வெள்ளநீர் ஓடமுடியாமல் நகரமே வெள்ளக்காடானது. உயிரிழப்புகளும், பொருட்சேதமும் அதிகளவில் ஏற்பட்டது.
சுற்றுலா தலமாக...
இதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மும்பை மாநகராட்சி மித்தி ஆறு மட்டுமின்றி நகரில் உள்ள அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும் தூர்வாரி வருகிறது. இந்தநிலையில், தற்போது மித்தி ஆற்றை சுற்றுலாதலமாக மேம்படுத்த மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.
இந்த திட்டத்திற்காக ரூ.21 கோடி செலவிடப்பட இருக்கிறது. மித்தி ஆற்றை சுற்றுலா தலமாக மேம்படுத்தும் திட்டத்துக்கு நாளை (வெள்ளிக்கிழமை) மாநகராட்சியின் நிலைக்குழு ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டப்பணியை 4 கட்டமாக செய்ய மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மித்தி ஆற்றில் படகு சவாரி சேவை தொடங்க திட்டமிட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story