ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிஓடிய கற்பழிப்பு கைதி குஜராத்தில் சிக்கினார்
ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிஓடிய கற்பழிப்பு கைதி குஜராத்தில் சிக்கினார்.
மும்பை,
ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிஓடிய கற்பழிப்பு கைதி குஜராத்தில் சிக்கினார்.
தப்பி ஓட்டம்
மும்பையை சேர்ந்தவர் சுனில் சவுகான்(வயது46). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கற்பழித்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தாள். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வெர்சோவா போலீசார் சுனில் சவுகானை கடந்த 20-ந்தேதி கைது செய்தனர்.
பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக வில்லேபார்லேயில் உள்ள கூப்பர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது, சுனில் சவுகான் கழிவறைக்கு செல்வதாக கூறி போலீசாரை ஏமாற்றிவிட்டு ஜன்னல் வழியாக தப்பி ஓடிவிட்டார்.
குஜராத்தில் சிக்கினார்
இந்த சம்பவத்தில் பணியில் இருந்த போலீஸ்காரர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் தப்பிஓடிய சுனில் சவுகானை பிடிக்க ஜூகு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதில், அவர் அந்தேரி ரெயில் நிலையத்திற்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி குஜராத் மாநிலம் வாபிக்கு தப்பிஓடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி, வாபியில் பதுங்கி இருந்த சுனில் சவுகானை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர் மும்பை அழைத்து வரப்பட்டார்.
Related Tags :
Next Story